Thursday, April 1, 2010

"கிறித்தவ மதத்தை மட்டும் ஏன் குறிப்பாக தாக்குகிறீர்கள் “

கிறித்தவ மதத்தை மட்டும் ஏன் குறிப்பாக தாக்குகிறீர்கள் “என்று கேட்கிறீர்கள் ,அதற்க்கு முக்கிய காரணம் ,நான் அவர்கள் மேல் வைத்திருக்கும் உண்மையான அன்புதான் .அவர் “அன்பே கடவுள் “என்றார் . அந்த அன்பு வடிவத்தையே நான் கடவுளாக காணுகிறேன் .அந்த யதார்த்தமான ,உண்மையான தைரியமான தன்னை யார் என்று உணர்த்துக் கொண்ட ஒரு குருவை .சிலுவையில் அறைந்து ,சிலையாக வடித்து அவர்பெயரில் ஒரு மதத்தை உண்டாக்கிக் கொண்டு பணத்தை வாரி இறைத்து ,கிறித்துவத்தையும் ,கிறித்துவ மதத்தையும் சரியாக புரிந்துக் கொள்ளாமலேயே ,இந்த உலகத்தில் பரப்புவது எந்த விதத்தில் நியாயம் ?
ஒன்று மட்டும் கூறிக் கொள்ளுகிறேன் .நான் எந்த மதத்தையும் சேராதவன் . எனக்கு என்று எந்த மதமும் கிடையாது , மதம் என்ற குறுகிய எல்லைக்குள் ,என்னை அடைத்துக் கொள்ள நான் ஒரு நாளும் விரும்ப மாடேன் .என்னுடைய மதம் மதமற்ற மதம்( Religion without any religion ) நான் எல்லா மதத்துக்கும் உடையவன் .நான் ஒரு உண்மையான கிருத்துவனை விட ,இந்துவை விட ,முகமதியரை விட ,ஜைனரை விட எந்தவிதத்திலும் குறைத்தவன் இல்லை .இதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள் .ஆகவே எந்த ஒரு உண்மையான ,கிருஸ்துவை உண்மையாக புரிந்துக்கொண்ட யாருடைய மனத்தையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல .குறிக்கோளும் இல்லை .தேவையும் இல்லை .அப்படி அவர்களுடைய மனதை புண்படுத்தினால் ,என்னுடைய மனதையே ,நானே புண்படுத்தி கொள்வதற்கு சமம் .என்னை சரியாக புரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு கேள்வி ஓராயிரம் கேள்விகளை உண்டுபண்ணும் .அது உண்மைதான் .இப்போது நம்மால் கிறிஸ்துவையும் ,கிறிஸ்துவ மதத்தையும் தாண்டி இன்னும் செல்ல முடியவில்லை .
ஆமாம் ,”நீங்கள் சொல்லுவது உண்மைதான் .இந்து மதத்தை தோண்ட தோண்ட ……!எதுவோ சொல்லுவார்கள் . அதற்க்கு இந்த புத்தகம் போதாது.இப்படி பல மதங்களில்
பல மூட நம்பிக்கைகள் ஊடுரிவி தான் இருக்கும் .நம்மவர்கள் கடவுளை நம்புங்கள் என்றுதான் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள் தவிர “கடவுளை அடையுங்கள்” “கடவுளை அறிந்துக் கொள்ளுங்கள் ” “கடவுளை உணர்ந்துக் கொள்ளுங்கள் “என்று சொல்லவில்லை .நீங்கள் ஒன்றை அறிந்திக் கொள்ளாத பொழுது ,உணர்த்துக் கொள்ளாத பொழுது தான் “நம்புதல் ” என்று வருகிறது .நம்புதலுக்கு அடித்தளம் மூடக்கொள்கை ,மற்றும் பொய் ,பயம் ,ஆசை இவை தான் .
அதை போலத்தான் ஜீசஸ் யை நம்புங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்களேத் தவிர ஜீசஸ்யை உண்மையாக புரிந்துக் கொண்டு ,உணர்ந்துக் கொண்டு நம்புங்கள் என்று எந்த பாதிரிமாரும் பிரச்சாரம் செய்வது இல்லை .ஏன் என்றால் அவர்களே ஜீசஸ் யை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை .இதனால் , ” என்னை சாப்பிடுங்கள் ,என்னை குடியுங்கள் ” என்று ஜீசஸ் சொன்னதற்க்காக இன்றைக்கு ஆப்பத்தையும் ,ஓய்ன் என்ற மதுபானத்தையும் சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாக ஆடுகிறார்கள் .ஆகவே நம்புதல் என்பது ஒருவர் புரிந்துக் கொண்டதால் தானே வரவேண்டும் .தவிர வெறும் நம்பிக்கை மூடநம்பிக்கைகளை மட்டும் வளர்க்கும் .

ஓஷோவின் கருத்து

காமத்தைக் கடக்க காமத்தில் மூழ்கு.. காமத்தில் மூழ்காமல் மறுகரைக்கு செல்லவே முடியாது.

கியோடோவின் கவர்னர்

ஜப்பானின் பழைய தலைநகரம் கியோடோவில் இருந்த பெருமை வாய்ந்த ஐந்து ஸென் புத்த கோயிலில் ஒன்றான டொஃபூக்குவில் மெய்ஜி காலத்தில் வாழ்ந்த சிறந்த ஸென் ஆசிரியர் கெய்சூ, அந்த புத்த கோயிலின் தலைமை ஆசிரியராக இருந்தார்.

ஒரு நாள் கியோடோவின் கவர்னர் அந்த கோயிலுக்கு வருகை தந்தார். அவர் தன்னுடைய விசிட்டிங் கார்டை அங்கிருந்த உதவியாளரிடம் கொடுத்து கெய்சூவை பார்க்க வேண்டும் என்றார். அவர் கொடுத்த அட்டையில் "கிடகாகி - கியோடோவின் கவர்னர்" என்று இருந்தது.

உதவியாளர் கெய்சூவிடம் சென்று அந்த அட்டையைக் காண்பித்தார். வாங்கி அட்டையை படித்துப் பார்த்த கெய்சூ "எனக்கு இவரை முன்பின் தெரியாது. அவரை பார்க்க முடியாது என்று சொல்லி முதலில் வெளியே அனுப்பு" என்று கூறினார்.

உதவியாளர் கவர்னரிடம் தன்னால் உதவமுடியாததற்கு மன்னிக்கவும் என்று கூறி அவர் தந்த அட்டையை திருப்பிக் கொடுத்தார். "என்னுடைய தவறு" என்று கூறிய கவர்னர், தன்னுடைய அட்டையில் இருந்த "கியோடோவின் கவர்னர்" என்ற வார்த்தைகளை பென்சிலால் அடித்து விட்டு, "மறுபடியும் ஆசிரியரிடம் இந்த அட்டையைக் காண்பிக்கவும்" என்று கூறினார்.

அட்டையை படித்து பார்த்து விட்டு, "ஓ!! அது கிடகாகியா?" என்று கூறி வியந்த ஆசிரியர், "இப்பொழுதே அவரை நான் பார்க்க வேண்டும், உள்ளே அனுப்பு" என்று கூறினார்.

கதவில்லாத கோயில்

ஹைசயெமொன் ஒரு பணக்காரன். நல்ல படிப்பாளி, அறிவுக் கூர்மையானவன், ஆர்வமுடன் கலைகளை கற்பதில் தீராதக் காதல் கொண்டவன். அவன் முனிவர்களும், ஞானிகளும் கூறிய படி ஒழுக்கமுடன் வாழ்ந்து வந்தான். தன்னுடைய பொருளைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவத் தயங்காதவன். ஆனாதைக் குழந்தைகளுக்கும், ஏழைக் குடும்பங்களுக்கும் தானே வலிய சென்று உதவி வந்தான். ஏழைகளுக்கு பயனாக இருக்க வேண்டும் என்று சாலைகளையும், பாலங்களையும் அமைத்துக் கொடுத்தான்.

தான் இறந்த போது கூட உயிலில் சொத்துக்களை தனது பையன்களும், பேரக் குழந்தைகளும் ஆண்டு அனுபவித்தாலும் ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று எழுதி வைத்திருந்தான்.

அவன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றினை மக்கள் இன்றும் கூறுவார்கள். ஒரு நாள் ஹைசயெமொனுடைய வீட்டிற்கு புத்த பிட்சு ஒருவர் வந்தார். அந்த காலத்தில் வாழ்ந்த பணக்காரர்களில் இருந்து வேறு பட்டு இருந்த ஹைசயெமொனுடைய செல்வ செழிப்பையும், கருனை உள்ளத்துடன் கூடிய நல்ல குணத்தையும் அறிந்து வைத்திருந்தார். அவனைப் பார்த்து தன்னுடைய புத்த விகாரத்திற்கு கதவு இல்லாததால், கோயிலின் கதவினை செய்வதற்கு பொருளோ பணமோ கொடுத்து உதவுமாறு கோரினார்.

ஹைசயெமொன் புத்த பிட்சுவைப் பார்த்து சிரித்துவிட்டு "நான் எழைகளுக்கு உதவுகிறேன், ஏனென்றால் அவர்களுடைய வறுமையின் கஷ்டத்தைப் பார்த்து மனம் வலிக்கிறது, கதவில்லாத கோயிலினால் யாருக்கு என்ன கஷ்டம், அப்படி என்ன அந்த கதவு முக்கியமானது?" என்று கேட்டார்.

முயற்சியில்லாமல் வெற்றி பெறுவது

சுகஹாரா பொகுடென் சிறந்த போர் வீரர். அவர் ஆரம்பித்த தற்காப்பு போர்பயிற்சிக் கலைப் பள்ளியின் பெயர் "முயற்சியில்லாமல் வெற்றி பெறுவது". மிகவும் புகழ் பெற்ற இந்த கதை அந்த பள்ளியின் பெயரையும், அங்கு கற்று தந்த கல்வி முறையையும் சொல்லுகிறது.

ஒரு முறை கிழக்கு ஜப்பானுக்கு செல்லும் பொழுது பொகுடென் படகு ஒன்றில் ஐந்து அல்லது ஆறு பேர்களுடன் பயனிக்க வேண்டி இருந்தது. அதில் பயனித்த தடியனும் முரடனுமான ஒருவன் சத்தமாக தன்னுடைய வலிமையைப் பற்றியும் தற்காப்புக் கலையில் (Martial Arts) தானே சிறந்தவன் என்றும் எத்தனை பேரை தான் வென்று இருப்பதாகவும் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்தான். மற்றவர்கள் அனைவரும் மிகவும் அமைதியாக இருந்தனர். மேலும் மேலும் தன்னுடைய வலிமையைப் பற்றி சுய தம்பட்டம் அடித்துக் கடுப்பேற்றினான்.
பொருத்துப் பார்த்த பொகுடென் கடைசியாக பொறுமை இழந்து "நல்லது. நாங்கள் அனைவரும் உன்னிடமிருந்து பல வகையான கதைகளை கேட்டு அறிந்தோம், நானும் சிறு வயதிலிருந்து தற்காப்புக் கலைகளை கற்று அதில் கூறிய படி நடந்து வருகிறேன். ஆனால் ஒரு நாளும் யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. எப்பொழுதும் எப்படி மற்றவர்களிடமிருந்து விழும் அடிகளிலிருந்து தப்பிப்பது என்றும் சண்டை என்று வந்தால் தோல்வியுறாமல் தற்காத்துக் கொள்வதுமே நான் பயின்றது" என்று அமைதியாக கூறினார்.

தன்னை எதிர்த்து பேசியதை பொருக்காத தடியன் "எந்த பள்ளியின் தற்காப்புக் கலையை பயின்று அதன் படி நடக்கிறாய்" என்று கேட்டான்.

பொகுடென் "முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறுவது (அ) தோற்காத வழி தேடுவதுதான் தான் பயின்ற பள்ளியின் பெயர்" என்று தயக்கமின்றி பதில் உரைத்தார்.

தடியன் "எதையும் முயற்சிக்காமலேயே வெற்றி பெறுவது என்றால் எதற்காக போர்வாளை உன்னுடைய இடையில் வைத்திருக்கிறாய்?" என்று கேட்டான்.

பொகுடென் "இரண்டு வாள்களான 'மனதை மனதால் தொடர்பு கொள்வது', 'கர்வத்தால் ஏற்படும் தற்பெருமையையும், கொடி போல வளரும் தீய எண்ணங்களையும்' வெட்டி எறியவே வைத்துள்ளேன்" என்று கூறினார்.
"அப்படியானால் போட்டிக்கு தயாரா, வா!, வந்து என்னுடன் சண்டையிடு, எப்படி முயலாமல் நீ வெற்றி பெறுகிறாய் என்று பார்த்து விடுகிறேன்" என முரடன் வீண் சண்டைக்கு அழைத்தான்.

பொகுடென் "இதுவரை எனது இதயமான வாள் வாழ்வை காப்பதற்கு தான் உபயோகப் பட்டது, ஆனால் இன்று எதிரி கெட்டவனாக இருப்பதால் வாழ்வை எடுக்கப் போகிறது" என்று சூளுரைத்தார்.
வீம்புக்காரன் மிகவும் ஆத்திரமடைந்து படகோட்டியை பார்த்து "இப்பொழுதே கரைக்கு ஓட்டு, இவனை ஒரு கை பார்த்து விடுகிறேன்" என்று குதித்தான்.

பொகுடென் இரகசியமாக படகோட்டியைப் பார்த்து கண் ஜாடை செய்து விட்டு, வீண் பெருமை பேசியவனைப் பார்த்து "படகை கரைக்கு ஓட்டுவது நல்லதல்ல, கரை படகுத்துரை ஆனதால் மக்கள் கூடும் இடம், போட்டியை அங்கு வைத்துக் கொள்ள வேண்டாம், நீ விருப்பப் பட்டால் நமக்கு முன்னால் கொஞ்சம் தூரத்தில் தீவு போல் தெரியும் மேட்டில் வைத்துக் கொள்ளலாம், படகில் இருப்பவர்கள் வீணாக நம்மால் நேரம் கடந்து செல்லத் தேவையில்லை" என்று கூறினார்.

படகோட்டி தீவுத் திடலுக்கு ஒட்டிச் சென்றான். தடியன் வேகமாக தீவில் குதித்து இறங்கி விட்டு "வா, இறங்கி வா!, உன் மண்டையை இரண்டாக பிளக்கிறேன்" என்று கத்திக் கொண்டே தன்னுடைய நீண்ட கத்தியை உரையிலிருந்து எடுத்தான்.
பொகுடென் "முயற்சியில்லாமல் வெல்வதற்கு முதலில் மனதை அமைதியடைய செய்ய வேண்டும், எனக்கு ஒரு நிமிடம் கொடு" என்று கூறி தன்னுடைய வாளை உருவி படகோட்டியிடம் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக துடுப்பை வாங்கிக் கொண்டார்.

பார்ப்பதற்கு பொகுடென் துடுப்பால் படகை நகர்த்தி கரைக்கு செல்வது போல் இருந்தது, ஆனால் வேகமாக படகை தண்ணீரில் இழுத்து துடுப்பைக் கொண்டு வேகமாக எதிர் திசையை நோக்கி படகை செலுத்த ஆரம்பித்தார்.
அதைப் பார்த்த ஜம்பவான், "எதற்கு நீ கரைக்கு வரவேண்டியது தானே?" என்று கத்தினான்.

பொகுடென் சிரித்துக் கொண்டே "எதற்காக! உனக்கு தேவையென்றால் நீந்தி இங்கே வா, நான் தரைக்கு எப்படி போவதென பாடம் எடுக்கிறேன், இதுதான் நான் கற்ற முயலாமல் வெற்றி பெறுவதன் பாடம்" என்று கூறி விட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி துடுப்பை போடலானார்.

முதல் கல்

ஒரு சமயம் ஸென் குரு டைரியோவை விருந்து ஒன்றிற்கு அந்த ஊரில் இருந்த பல வீடுகளுக்கு சொந்தக் காரனான பணக்காரர் ஒருவர் அழைத்து இருந்தார். மற்ற புத்த துறவிகளும் அங்கு வந்திருந்தனர்.

அந்த பணக்கார வீட்டில் இருந்த சமையல்காரன் நகைச்சுவையுடன் துறவிகளிடம் விளையாடி பார்த்து விடுவது என முடிவெடுத்து, சுறாவினை கழுவி, நன்றாக வெட்டி, பதமாக சுறாப் புட்டு செய்து வைத்திருந்தான். மீன்கறியை புத்த துறவிகளோ (அ) ஆசிரியர்களோ தொடுவது கூட விரும்ப தகாத காரியமாக கருதப் பட்டது.

மற்ற எல்லா துறவிகளும் மீன்கறியினை நீக்கிவிட்டு மற்ற காய்கறிகளை மட்டுமே உண்டனர். ஆனால் அது என்ன என்று தெரியாதவரைப்போல டைரியோவோ கொஞ்சமும் வைக்காமல் சுறாபிட்டினை ஒரு பிடி பிடித்தார்.

அருகில் இருந்த ஒரு துறவி டைரியோவின் சட்டைக் கைப் பகுதியை மெதுவாக யாருக்கும் தெரியாமல் இழுத்து, "அது, மீன் கறி" என்று இரகசியமாக சொன்னார். டைரியோவோ அந்த துறவியின் கண்களைப் பார்த்து தயக்கமின்றி சாதுர்யமாக "அது சரி, உனக்கு எப்படித் தெரியும் அது மீன்கறி என்று?" பதிலுரைத்தார்

அரைவேக்காடு

மூன்று மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காகச் செல்லும் வழியில் சிற்றுண்டி தாயாரிக்கும் பாட்டியிடம் தோசை கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள். ஒருவன் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான், மற்ற இருவரும் கார சாரமாக தாம் படித்ததைப் பற்றி விவாதிதித்துக் கொண்டிருந்தனர். சாப்பிட்டுக் கிளம்பும்முன் பாட்டி, "எங்க போய்ட்டிருக்கிங்க தம்பி?" எனக் கேட்டாள். மூவரும் தேர்வு எழுத போய்க் கொண்டிருப்பதாக கூறினார்கள். அதற்கு பாட்டி "நீங்கள் இருவரும் தோல்வி அடைவீர்கள், மூன்றாமவன் வெற்றி பெருவான்", எனக் கூறினாள். பாட்டியை முறைத்துக் கொண்டே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

தேர்வு முடிவுகள் பாட்டி கூறிய படியே அமைந்திருந்தது. இருவரும் அந்த பாட்டியிடம் சென்று "உங்களுக்கு முகசாஸ்திரம் தெரியுமா?" எனக் கேட்டார்கள். அதற்கு, எனக்கு தெரிந்ததெல்லாம், "வேகாத வடை சத்தம்மிட்டுக் கொண்டு அங்கும் இங்கும் ஓடும்; வெந்த வடை அமைதியாக இருக்கும்" என்றாள்.

வைரசூத்திரம்

ஒரு புத்ததுறவி "வைரசூத்திரம்" என்ற அரிய விலைமதிப்பில்லாத புத்தகத்தை எங்கு சென்றாலும் எடுத்து செல்வார். அவர் இருந்த ஊரில் அவரிடம் மட்டுமே அந்த புத்தகம் இருந்தது. அதனால் அந்த புத்தகத்திலிருந்து அவர் கூறும் கருத்துக்களை மற்ற துறவிகள் மட்டும் அல்லாது அறிஞர்களும், மற்ற சாதரணமான மக்களும் கேட்டு அறிந்தனர். ஒரு நாள் அந்த புத்ததுறவி பக்கத்து ஊருக்கு ஒரு மலையின் வழியாக ஏறி சென்று கொண்டிருந்தார். மிகுந்த பசி களைப்பினால் அங்கு சிற்றுண்டி விற்றுக் கொண்டிருந்த பாட்டியிடம், "அம்மா!, என்னிடம் பணம் இல்லை, ஆனால் சிறந்த களஞ்சியமான வைரசூத்திரம் உள்ளது. நீங்கள் எனக்குப் பசியாற சிற்றுண்டி அளித்தாள், அதிலிருந்து சிறந்த கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றேன்" என்றார். அதற்கு வைரசூத்திரம் பற்றி கேட்டு அறிந்திருந்த அவள், "நான் கேட்கும் எளிய கேள்விக்கு விடை அளித்தாள், உங்களுக்கு சுடச்சுட பருக தேனிரும், சாப்பிட இட்லியும் தருகிறேன்" என்றாள். அவரும் சரியென்று கூறினார். நீங்கள் நான் கொடுக்கும் உணவை, "இறந்த கால மனநிலையுடன் சாப்பிடுவிர்களா, நிகழ்கால மனநிலையுடன் சாப்பிடுவிர்களா, அல்லது எதிர்கால மனநிலையுடன் சாப்பிடுவிர்களா?" எனக் கேட்டாள்.

பதில் தெரியாத துறவியும், வைரசூத்திரத்தை எடுத்துப் பிரித்து அலசி ஆராய்ந்து பதில் தேடிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியும் பதில் சொல்லாததால், விற்று முடித்த பாட்டி, சாமன்களை எல்லாம் எடுத்து மூட்டைக் கட்டி விட்டு, "நீ ஒரு முட்டாள்" என்று கூறி தர்மசங்கடத்தில் துறவியை ஆழ்த்தி விட்டு, "இங்கு வைத்திருக்கும் தேனிர் மற்றும் இட்லியை உன் வாயினால் சாப்பிடு" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

அசைகிறது

ஒரு மடத்தில் நான்கு துறவிகள் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். திடிரென கம்பத்தின் மீது இருந்த மடத்தின் கொடி வேகமாக அசையத் தொடங்கியது.
அவர்களில் இளைய துறவி தியானம் கலைந்து, "கொடி அசைகிறது" எனக் கூறினார். அவரை விட அனுபவம் வாய்ந்த துறவி "காற்று அசைகிறது" எனக் கூறினார்.
இருபது வருடங்களாக அந்த மடத்தில் இருக்கும் மூன்றாவது துறவி அவர்களைப் பார்த்து, "மனம் அசைகிறது" என்று கூறினார்.
இவர்களின் பேச்சினைக் கேட்டு பொருமையிழந்த நால்வரில் மூத்த துறவி கடுமையுடன், "உதடுகள் அசைகின்றன" என்றார்.

கோப்பையை காலி செய்

ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் "கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை" என்றார். அதற்கு துறவி "நீயும் இந்த கோப்பை போல் தான்", "நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்" என்றார்.

சமதள சூத்திரம்

மடத்திலிருந்த இளைய துறவி "சமதள சூத்திரம்" என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த போது திடிரென ஒரு சந்தேகம் வந்து, மடத்தின் மூத்த துறவியை பார்த்து, "குருவே, தியானத்தில் இருக்கும் போது உங்களால் பார்க்க முடியுமா? முடியாதா?" என்று கேட்டார்.
தன் கையிலிருந்த கோலால் மூத்த துறவி இளைய துறவியை மூன்று முறை பலமாக அடித்த பின்பு, "நான் அடித்த போது வலித்ததா? வலிக்கவில்லையா?" என்று கேட்டார்.
இளையவர்: "வலிக்கவும் செய்தது, வலிக்காமலும் இருந்தது."
முதியவர்: "பார்க்கவும் முடிந்தது, பாராமலும் இருந்தது"
இளையவர்: "எப்படி உங்களால் ஒரே சமத்தில் பார்த்தும், பார்க்காமலும் இருக்க முடியும்?"
முதியவர்: "உள் மன எண்ணங்களையும், அதன் ஓட்டங்களையும் என்னால் பார்க்க முடிந்தது, வெளி உலகின் அழகையும், மனிதர்களில் யார் நல்லவர், கெட்டவர், நடந்தவைகளில் எது நல்லது, கெட்டது என்பதை என்னால் பார்க்க முடிய வில்லை" என்றார்.

எரிந்த புத்தகங்கள்

ஒரு சமயம் சிறந்த தத்துவ ஞானியும், மேதையும் ஆன ஒருவர் ஸென் பற்றிய புத்தகங்களை பல வருடங்களாக இடைவிடாது படித்து தன்னுடைய நேரம் முழுமையும் செலவு செய்து வந்தார். ஒரு நாள் அவர் ஸென் துறவிகள் அடையும் பேரானந்த நிலையான தன்னை அறியும் ஞான ஒளியினை பெற்றார், பெற்ற மறு நிமிடமே தன்னுடைய முற்றத்தில் தான் படித்த எல்லா புத்தகங்களையும் போட்டு தீ மூட்டி எறித்தார்.

பவித்திர பூனை

ஒரு ஸென் மடத்தின் தலைமைக் குருவும் அவருடைய சீடர்களும் மாலை நேர தியானம் செய்வது வழக்கம். அந்த மடத்திலிருந்த குட்டி பூனை, அவர்கள் தியானம் செய்யும் போது அங்கும் இங்கும் உலாவுவதும், அடிக்கடி ஏப்ப மிட்டவாறும் இருந்தது. சீடர்கள் அடிக்கடி தியானத்தை விட்டு கலைவதும், பூனையின் சேட்டைகளை காண்பதாகவும் இருந்தனர். இதைக் கண்ட தலைமைக் குரு, ஒரு சிடனை அழைத்து, தினமும் மாலை நேர தியானத்திற்கு முன்பு, அந்த பூனையை பிடித்து ஒரிடத்தில் கட்டி போடுமாறு கூறினார். தினசரி தியானம் செல்வதற்கு முன்பு அந்த பூனை கட்டி போடப் பட்டது. சில வருடங்களுக்கு பிறகு தலைமைக் குரு இறந்தார். அதற்கு சில வருடங்களுக்கு பிறகு அந்த பூனையும் வயதானாதால் இறந்தது.

பூனை இறந்த மறுநாளே மற்றொறு பூனை கொண்டு வரப் பட்டு கட்டி போடப் பட்டது. அதுவே பழக்கமாகி ஒரு பூனை இறந்ததும் அடுத்த பூனை கொண்டு வரப்பட்டு ஆண்டாண்டு காலங்களாய் தொடரப் பட்டது. பின்னர் வந்த சில ஸென் புத்த பிட்சுகள் பவித்தரமான பூனையை பற்றியும் அதணால் தியானத்திற்கு ஏற்படும் முக்கிய நன்மைகளை பற்றியும் பிரசாங்கமும் நூல்களும் எழுத ஆரம்பித்தனர்.

சொற்கள் இல்லாத வார்த்தை

இது ஒரு கோஆன்-KOAN (ஞான நெறியை போதிக்கும்) வகையைச் சார்ந்த கதை.

ஒரு தத்துவஞானி புத்தரைப் பார்த்து "வார்த்தைகளை உபயோகிக்காமலும், பேசாமலும், உங்களால் உண்மையை கூற முடியுமா?" என்று கேட்டார்.
புத்தர் மவுனமாக இருந்தார்.
தத்துவஞானி புத்தரை நோக்கி, "உங்களுடைய கருனை மிகுந்த அன்பினால் என்னுடைய மாயை தெளிந்து உண்மையான வழியை அரிய முடிந்தது", என்று வணங்கி நன்றி கூறி விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றபின் புத்தரின் சீடர் ஆனந்தா, "அந்த தத்துவஞானி எப்படி விரைவாக உணர்ந்து கொண்டார்" என்று கேட்டார்.
புத்தர் அதற்கு, "நல்ல குதிரை சாட்டையின் நிழல் பட்டால் கூட ஒடும்", என்று பதில் அளித்தார்.

சுகமானது பன்றி வாழ்வு

ஒரு ஸென் துறவிக்கு திடிரென ஒரு நாள் அடுத்த பிறவியை பற்றிய ஞானோதயம் கிடைத்தது. உடனே அவர் தன்னுடைய சீடரை அழைத்து எனக்கு ஒரு உதவி செய்ய மறுக்காமல் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சினார்.
"நீங்க எது சொன்னாலும், நான் செய்கிறேன் குருவே" என்று சீடன் பதில் கூறினான்.
"எனது அடுத்த பிறவியில் நான் பன்றியாக பிறப்பேன். நமது வீட்டு பெண் பன்றி நான் இறந்ததும், குட்டிகள் போடும், அதில் நான் நான்காவது குட்டி, எனது வலது கண்ணுக்கு மேலே உள்ள நெற்றியில் ஒரு குறி இருக்கும், அதனை வைத்து நீ அடையாளம் தெரிந்து கொள்ளலாம், அந்த குட்டியை நீ உடனடியாக கொல்ல வேண்டும்!" என்று கூறினார்.
ஒரு வருடத்துக்குள், ஸென் துறவி இவ்வுலக வாழ்வை நீத்தார், அவர் கூறிய படியே பெண் பன்றி குட்டிகளை ஈன்று எடுத்தது. சீடன் கத்தியை நன்றாக தீட்டிக் கொண்டு அந்த நான்காவது குட்டியிடம் சென்றார். "நிறுத்து! என்னைக் கொல்லாதே" என்று அந்த பன்றிக் குட்டி அலறியது.
கத்தியை கிழே போட்ட சீடன் அச்சரியத்துடன் அந்த குட்டியை பார்த்தான்.
"நான் உன்னை மாதிரி இருந்த போது பன்றியின் வாழ்வு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இந்த வாழ்வு மிகவும் சுகமாக இருக்கிறது. அதணால் இப்படியே இருந்து விடுகிறேன்".

கங்கையை கடக்க எளிய வழி

இளவரசராக இருந்த கௌதமர், ஞானம் பெற்று புத்தராக மாறிய பின்பு தன்னை பின்பற்றி நடக்கும் சீடன் ஒருவன் கங்கையின் கரையில் உள்ள மரத்தடியில் அமர்ந்து வெகு தீவிரமாக தியானம் செய்வதை பார்த்தார். அவனிடம் சென்ற புத்தர் "எதை அடைவதற்காக இவ்வளவு ஆழ்ந்த முயற்சியுடன் தியானம் செய்கிறாய்?" எனக் கேட்டார். அதற்கு சீடன் "எந்த கடினமும் இல்லாமல் இந்த கங்கையின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செல்ல வேண்டும், அதற்கான ஆற்றலை பெறுவதற்காகவே நான் தியானம் செய்கிறேன்" என்று கூறினான். புத்தர் சில நாணயங்களை அவனிடம் கொடுத்து "ஒரு நல்ல படகு ஓட்டியிடம் உன்னுடைய தேவையை கூறு, அவன் எளிதில் உனக்கு தேவையான வழி காட்டுவான்" என்று கூறினார்.

இன்னமும் சாகவில்லை

ஒரு பேரரசர் தன்னுடைய ஸென் குரு குடோவைப் பார்த்து "தன்னை அறியும் ஞான ஒளியினை அடைந்த ஒருவன் இறந்த பின் என்ன ஆவான்?" என்று கேட்டார்.
குடோ: "எனக்கு எப்படி தெரியும்?"
பேரரசர்: "உங்களுக்கு தெரியாமல், வேறு யாருக்கு தெரியும், நீங்கள் தானே ஸென் குரு?"
குடோ: "ஆமாம்!!, ஆனால் இன்றுவரை சாகவில்லை" என்று பதில் அளித்தார்.

புலியா எலியா?

ஒரு நாள் பொட்டல் காடு வழியாக ஒருவன் சென்று கொண்டிருந்த போது திடிரென கொடிய புலி ஒன்று துறத்த ஆரம்பித்தது. அவன் ஒடினான், ஆனால் ஒடுவதற்கு மேலும் வழி இல்லாமல் செங்குத்தான மலைப் பாறை முடிவுக்கு வந்ததால், அதில் இருந்த கொடி ஒன்றினைப் பிடித்துக் கொண்டு கிழே இறங்க ஆரம்பித்தான். அவன் கஷ்டப் பட்டு தொங்கிக் கொண்டு இருந்த போது கொஞ்சம் தூரத்தின் மேல் இருந்த பாறையின் துளையில் இருந்து வெளிவந்த இரண்டு சுண்டெலிகள் அந்த கொடியினை கொஞ்சம் கொஞ்சமாக கூரிய பற்களால் கடிக்க ஆரம்பித்தன. கிழே விழுந்தால் உயிர் தப்புவது கடினம், மேலே புலி உறுமிக் கொண்டு காத்திருக்கிறது. அப்போது தான் பற்றி வந்த கொடியில் கைக்கு எட்டும் தொலைவில் நன்றாக பழுத்த காட்டு ஸ்ட்ராபெரி பழத்தை பார்த்தான். பறித்தான், ருசித்தான். என்ன அருமையான சுவை.

பாத்திரங்களும் சூத்திரங்களும்

ஜப்பானில் டெட்சுகன் என்ற ஸென் துறவி புத்தருடைய சூத்திரங்களை புத்தகமாக பதிப்பதற்கு முயன்றார். சைனிஷ் மொழியிலிருந்த சூத்திரங்களை மொழி பெயர்த்து ஜப்பானிஷ் மொழியில் 7000 புத்தகங்கள் பதித்து வெளியிடுவது என்று முடிவு செய்தார். ஆனால் அந்த காலத்தில் அது ஒரு கடினமான வேலை, புத்தகங்கள் பதிப்பதற்கு தேவையான மர உப கரணங்களும், பிற விதமான பொருட்கள் மற்றும் ஆட்கள் உதவியும் அவருக்கு தேவைப் பட்டது.
டெட்சுகன் எல்லா இடங்களுக்கும் பாத யாத்திரையாக சென்று பணம் திரட்டினார். சிலர் ஒரு சில நாணயங்களே தருவர், சிலர் தாரளமாக பொருள் உதவி செய்தனர். ஆனால் அவர் எல்லாரையும் சமமாக மதித்து அன்புடன் நன்றி கூறுவார். பத்து வருடங்கள் முடிவில் அவருக்கு தேவையான பணம் கிடைத்தது. அந்த சமயத்தில் உஜி ஆறு பெருக்கெடுத்து ஒடி எல்லா இடங்களையும் முழ்கடித்ததால் பஞ்சம் தலை விரித்தாடியது. அவர் தான் சேகரித்த எல்லாவற்றையும் மக்களுக்கு கொடுத்து அவர்களை பசியில் இருந்து காப்பாற்றினார்.
பிறகு இரண்டாவது முறையாக பல வருடங்கள் சேகரித்த பணத்தையும் தொற்று நோய் வந்து பெருமளவில் மடிந்து கொண்டிருந்த மக்களை காப்பதற்காக செலவழித்தார். இருபது வருடங்களுக்கு பிறகு அவருடைய சூத்திர புத்தகம் வெளி வந்து அவருடைய குறிக்கோள் பூர்த்தி அடைந்தது. உஜி ஆறு ஒடும் கியோடொ நகரில் உள்ள மடத்தில் இன்றும் அவருடைய முதல் பதிப்பு புத்தகம் உள்ளது.
ஜப்பானில் டெட்சுகன் துறவியினை பற்றி இன்றும் பேசும் போது, "அவருடைய மூன்றாவது சூத்திரத்தை விட, முதல் இரண்டு கண்ணுக்குத் தெரியாத சூத்திரங்கள் மிகவும் விலை உயர்ந்தது" என்று குறிப்பிடுவர்.

கத்துக் குட்டி

ஒரு மாணவன் நாடகத்தில் சிறுகதை பாடும் பாடகராக (Ballad Singer) வேண்டும் என்று ஆசிரியர் ஒருவரிடம் சென்று சேர்ந்தான். அந்த ஆசிரியரோ மிகவும் கடுமையானவர், அந்த மாணவனை ஒவ்வொரு நாளும் ஒரே கதையின் ஒரு பகுதி பாடலை மறுபடி மறுபடி பாடிக் காண்பிக்கச் சொன்னார். இது பல மாதங்களுக்கு நீடித்தது. புது பாடல்கள் பாடுவதற்கோ (அ) வேறு நுணுக்கங்களை கற்று கொள்வதற்கோ அந்த ஆசிரியர் அனுமதிக்க வில்லை.

ஒரு கட்டத்தில் மாணவன் பொறுமை இழந்து, அந்த இடத்திலிருந்து கிளம்பி வேறு ஒரு ஆசிரியரை தேடி சென்றான். ஒரு நாள் இரவு, செல்லும் வழியில் மனப்பாடமாக பாடும் பாடல் போட்டி ஒன்று நடந்தது. தோல்வி அடைந்தால் எதையும் இழக்க போவதில்லை என்பதனால், அந்த போட்டியில் கலந்து கொண்டு தனக்கு தெரிந்த அந்த ஒரே பாடலை பாடினான்.

அந்த போட்டியை நடத்தியவர், அவனை சிறப்பாக பாடியதாக வெகுவாக புகழ்ந்து முதல் பரிசினை அளித்தார். அவனோ தான் ஒரு கத்துக் குட்டி, இப்போதுதான் பாடக் கத்துக் கொள்வதாக கூறினான். உடனே போட்டியை நடத்தியவர், "உன்னுடைய குரு யார்?. அவர் உண்மையிலேயே சிறந்த ஆசிரியர். அவர் எங்கிருக்கிறார்?" எனக் கேட்டார்.

அதைக் கேட்ட மாணவன் மீண்டும் தனது முந்தைய ஆசிரியரிடமே சென்று பயின்றார். அப்புறம் என்ன அவர் வேறு யாரும் அல்ல, பிற்காலத்தில் கோஸிஜி என்றழைக்கப் பட்ட மிக சிறந்த நாடகப் பாடகர் தான் அந்த மாணவர்.

கண்ணாடியான செங்கல்

சைனாவின் சூஷுவானில் பிறந்த சா'ன் ஆசிரியர் மாசூ தன்னுடைய சிறு வயதில் அனுபவமற்ற இளவயது துறவிகளுடன் புத்த விகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வயதில் தன்னையும் துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டான்.

நான்யூவேஷான் மலையிலிருந்த பான் ஜோ சூ கோயிலின் மாண்புமிக்க தலைமைக் குருவாக இருந்தவர் ஹுவாய் ஜாங், அங்கு சா'னினை கற்பதற்காக வந்திருந்த மாசூவினைப் பார்த்தவுடன் தன்னொளி பெறுவதற்கு தகுதியானவனாக இருந்ததைக் கண்டார்.

ஹுவாய் ஜாங் மாசூவினைப் பார்த்து, "எதற்காக உட்கார்ந்த நிலையில் செய்யும் சா'ன் தியானத்தினைப் பயில வேண்டும் என்கிறாய்?" என்று கேட்டார்.

"புத்தாவாக மாறுவதற்கு" என்று பதில் வந்தது.

உடனே பக்கத்தில் இருந்த செங்கல்லினை எடுத்து தேய்க்கலானார்.

இளம் துறவியான மாசூ, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான்.

"இந்த செங்கல்லினை கண்ணாடியாக மாற்றுவதற்காக வழவழப்பாக தேய்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

"செங்கல்லினை தேய்ப்பதால் மட்டுமே எப்படி கண்ணாடியாக மாற்ற முடியும்?" என்றான் மாசூ.

"நீ உட்கார்ந்த சா'ன் தியானத்தினை கற்பதால் மட்டுமே புத்தாவாக மாற முடியும் என்கிற போது நான் ஏன் செங்கல்லினை தேய்த்து கண்ணாடியாக மாற்ற முடியாது?" என்று கேட்டார் குரு ஹுவாய் ஜாங்.

கொஞ்சம் நேரம் குரு ஹுவாய் ஜாங் கூறியதை யோசித்துப் பார்த்த மாசூ, "ஆசிரியரே, என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்" என்றான்.

"நீ ஓட்டிச் செல்லும் கட்டை வண்டி தீடிரென நகராமல் நின்று விட்டது என்று வைத்துக் கொள்வோம்" என்ற ஹுவாய் ஜாங், "அந்த சமயத்தில் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டவர், பின்பு தொடர்ந்து, "உன்னுடைய எருதினை ஓட்டிச் செல்வாயா அல்லது கட்டை வண்டியை ஓட்டிச் செல்வாயா?" என்ற கேள்வியினைத் தொடுத்தார்.

மாசூவினால் எந்த பதிலினையும் சொல்ல முடியவில்லை. மேலும் தொடர்ந்த குரு "நீ உட்கார்ந்த நிலையில் சா'ன் தியானத்தினைக் கற்க விரும்புகிறாயா அல்லது 'உட்கார்ந்த புத்தா'வினையைக் கற்க விரும்புகிறாயா?. உனது விருப்பம் என்ன?" என்று கேட்டார். "நீ முதலில் கூறியதைக் கற்க விரும்பினால் அதனை உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது தூங்கிக் கொண்டேக் கூட பயிற்சி செய்யலாம். நீ இரண்டாவதாக கூறியதைக் கற்க விரும்பினால் புத்தருக்கு என குறிப்பிட்ட தோற்றநிலை இல்லை. உண்மையில் புத்தருடைக் கோட்பாடுகள் சமயக் கொள்கைகள் அல்ல. அதனால் அவருடைக் கருத்துக்கள் தத்துவமும் அல்ல. சித்தாந்தமும் அல்ல. உண்மையான வழியினை அடைவதற்கு உட்கார்ந்த சா'ன் தியானத்தினைப் பின்பற்றுவது புத்தாவை படுகொலை செய்வதற்கு சமம். அதனால் உன்னால் என்றும் உணமை வழியினை அடைய முடியாது." என்றார்.

குரு ஹுவாய் ஜாங் கூறியதைக் கேட்ட மாசூ தன்னுடைய உடலில் விசித்திரமான ஒளி புத்தத் தன்மையுடன் புகுவதைப் போல் உணர்ந்தான். மரியாதையுடன் கூறிய வணக்கத்தினைத் தெரிவித்து தன்னை அவருடைய சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டினான்.

கற்பாலம்

இன்றைய கோஆன் மிகவும் புகழ் பெற்றது. இது சாவோ சாவ் என்ற நகரத்தில் வாழ்ந்த என்பது வயதான சவோ சாவிற்கும் (ஊரின் பெயரே ஸென் குருவின் பெயராகி விட்டது. இந்தியாவில் கூட ஊரின் பெயரே புகழ் பெற்றவர்களின் பெயர் ஆகிவிடுவதுண்டு. நாளடைவில் புகழ் பெற்றவர் ஊர் பெயராலேயே அழைக்கப் படுவது வழக்கம்.) அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவி ஒருவருக்கும் நடந்த உரையாடலாகும்.

குரு சாவோ சாவிடம் வந்த துறவி ஒருவர், "வெகு நாட்களுக்கு முன்பிருந்தே சாவோ சாவிலிருக்கும் புகழ் பெற்ற கற்பாலத்தினைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இங்கு வந்த பின்பு நான் பார்ப்பது என்னவோ வெறும் சாதரண மரப்பாலம்தான்" என்றார்.

சவோ "மரப்பாலத்தினை மட்டும் தான் உங்களால் பார்க்க முடிகிறது; ஆனால் கற்பாலம் இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை" என்று பதிலுரைத்தார்.

துறவி, "கற்பாலமா என்ன?"

சவோ, "கழுதைகளையும் கடக்க வைக்கிறது, குதிரைகளையும் கடக்க வைக்கிறது".

மல்யுத்த வீரன்

ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்.. எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..

அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்.. " அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்.. " இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது.. அப்போதும் அதே அறிவுரை..

போட்டி நாள் அருகில் வந்து விட்டது.. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், " நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.. "போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி...

மல்யாத வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்... டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.. இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணுகிறான்.. போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..

கத்தரிக்காயிடம் அல்ல

அந்த வீட்டு எஜமானருக்கு கத்தரிக்காய் மிகவும் பிடித்துப் போனது. சமையல்காரர் கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் மசாலா என்று போட்டு அசத்தி விட்டார். சுவைத்துச் சாப்பிட்டார் எஜமானர்.

சமையல்காரர் கூறினார்... "பிரபு, காய்களிலேயே உசத்தியானது கத்தரிக்காய்தான்." எஜமானர் கேட்டார், "அது எப்படி?" சமையல்காரர் பதில் சொன்னார். "அதன் தலையில்தானே கிரீடம் இருக்கிறது..." ரசித்து சிரித்தார் எஜமானர்.

சில நாட்களிலேயே கத்தரிக்காய் சலித்துப்போனது எஜமானருக்கு. அது தெரியாத சமையல்காரர் அதையே வழமைபோல் செய்து வைத்து விட்டார். கோபம் வந்து விட்டது எஜமானருக்கு. "இதெல்லாம் ஒரு காய் என்று வைக்கிறாயே?" என்றார். சமையல்காரர் சொன்னார், "ஆமாம் பிரபு, இருக்கிற காய்களிலேயே மோசமானது கத்தரிக்காய்தான்."

எஜமானர் கேட்டார், "அது எப்படி?" பதில் சொன்னார் சமையல்காரர்... "அதனால்தானே அதன் தலையில் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள்." அசந்து போனார் எஜமானர்.

"சில நாட்களுக்கு முன்பு இதையே கிரீடம் என்றாய், இப்போது இப்படிச் சொல்கிறாயே?" சமையல்காரர் அமைதியாகச் சொன்னார், "பிரபு, நான் தங்களிடம்தான் வேலை பார்க்கிறேனே தவிர, கத்தரிக்காயிடம் அல்ல!"

"அப்படியா?"

ஒரு ஊரில் ஒரு ஜென் துறவி இருந்தார். அவர் இடத்துக்கு அருகில் ஒரு அழகான பெண்ணும் தன் தாய் தந்தையருடன் வசித்து வந்தாள். ஒரு ஆண்டு அவள் தாய் தந்தையர் வேறொரு நாட்டுக்கு போய்விட்டு வந்து பார்க்கையில் அவள் கையில் ஒரு குழந்தை இருந்தது.

யார் உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்று கேட்கவும் அவள் நம் துறவியைக் கையைக் காட்டினாள். துறவியைக் கடிந்து கொண்ட அவள் பெற்றோர், குழந்தையை நீர் தான் வளர்க்க வேண்டும் என்றனர்.

அதற்கு துறவி, "அப்படியா?" என்றார். குழந்தையைத் தாமே வளர்த்தார். ஆறு மாதங்கள் குழந்தைக்கான பாலைக் கூட பிச்சையெடுத்தே ஊட்டுவார். பொறுக்க இயலாத அந்தப் பெண் ஒரு நாள் தமது பெற்றோரிடம் குழந்தையின் தந்தை ஒரு மீன் பிடிப்பவன் என்று ஒப்புக் கொண்டாள்.

மிகவும் வருத்தத்துடன் மன்னிப்புக் கேட்ட அந்தப் பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு துறவி பேசிய வார்த்தை, "அப்படியா?".

".திருடும் சீடன்."

ஒரு ஜென் துறவிக்கு நிறைய சீடர்கள் இருந்தனர்.

ஒரு சீடன் திருடும் போது பிடிபட்டுக் கொண்டான். அவனை உடனே வெளியனுப்புமாறு மற்ற சீடர்கள் கேட்டுக் கொண்டனர். துறவியோ கண்டுகொள்ளவே இல்லை.

மீண்டும் ஒரு முறை அவன் திருடும் போது பிடிபட்டான். அப்போதும் துறவி அதைக் கண்டுகொள்ளவில்லை.

உடனே மற்ற சீடர்கள் அனைவரும் ஒரு மனு எழுதி அச்சீடனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறப்போவதாக எழுதி அனைவரும் கையொப்பமிட்டிருந்தனர்.

அதைப் படித்த துறவி அன்பு கனிந்த குரலில் கீழ்க்கண்டவாறு கூறினாராம்:

"சீடர்களே நீங்கள் அனைவரும் எத்துணை புத்திசாலிகள் என்பதை நினைத்துப் பெருமையடைகிறேன். உங்களால் எது சரி என்றும் எது தவறு என்றும் அறிய முடிகிறதே! நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த சீடருக்கு என்னைத் தவிர வேறு யார் எது சரி என்றும் எது தவறு என்றும் எவ்வாறு தவறுகளில் இருந்து சரியாகப் பயில வேண்டும் என்பதையும் சொல்லித் தருவார்கள்?"

அப்போது அந்த சீடர் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென வழிந்ததுடன் அதன் பிறகு அவர் திருடவேயில்லை.

அந்த ஜப்பானிய ஜென் துறவியின் பெயர் பேங்கீய் ஆகும்.

"திருடன், திருடன்"

ஒரு கில்லாடித் திருடனின் மகன் தன் தந்தையிடம் தொழில் இரகசியத்தைத்
தனக்கும் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டான். அனுபவத்திலும் வயதிலும்
முதிர்ந்த அவனுடையத் தந்தை தன் பிள்ளையிடம், "இன்று இரவு அருகில்
இருக்கும் ஊரில் உள்ள ஒரு பெரிய வீட்டில் கன்னம் வைத்து திருடுவதை பற்றி
உனக்குச் சொல்லித் தருகிறேன்" என்று கூறினான். அந்த பெரிய வீட்டில்
அனைவரும் உறங்கும் போது தன்னுடைய இளவயது மகனை யாருக்கும் தெரியாமல் உள்ளே கூட்டிக் கொண்டு சென்றான். துணிகள் அனைத்தையும் மாட்டி வைக்கும் ஒரு சிறிய அறையில் தன்னுடைய மகனை அனுப்பி சிலத் துணிகளை எடுத்துக் கொண்டு வரச் சொன்னான். மகன் அந்த அறையின் நுழைந்த உடனே வேகமாக அந்த கதவை இழுத்து வெளிப் பக்கமாக பூட்டி சாத்தினான். பின்பு வெளித்தாழ்வார கதவுக்கு சென்ற திருடன் வேகமாக எல்லாருக்கும் சத்தம் கேட்கும் படி தடதடவெனத் தட்டி சத்தம் எழுப்பி விட்டு யாரும் பார்ப்பதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறினான்.

வீட்டில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டு விழித்தனர். வேலைக்காரப் பெண் ஒருத்தியிடம் விளக்கு ஒன்றினைக் கொடுத்து, "மேலேயுள்ள துணிகள் அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. போய் என்னச் சத்தம் என்று பார்" என்று அனுப்பி வைத்தாள் அந்த வீட்டு எஜமானி. உள்ளேயிருந்த பையனுக்கோ தன் வாழ்நாளிலேயே பார்த்திராத பயம் உடலெல்லாம் பரவ ஆரம்பித்தது. வேலைக்காரப் பெண் அருகில் நடந்து வரும் சத்தம் கேட்டதும், "மியாவ், மியாவ்" எனப் பூனையைப் போல சத்தம் கொடுக்க ஆரம்பித்தான். ஏதோ பூனை உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறது என நினைத்து கதவைத் திறந்தாள் வேலைக்காரி. உடனடியாக வெளியே ஓடிவந்த பையன் அவள் கையிலிருந்த விளக்கை தட்டி அனைத்து விட்டு வெகு வேகமாக திறந்திருந்த வெளித்தாழ்வாரத்தின் வழியாக ஓடினான்.

வேலைக்காரி, "திருடன், திருடன்" என கூச்சலிட்டதைப் பார்த்ததும், வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடினவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். பையனும் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வேகத்துடன் அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் தூரம் ஓடியவன் அருகிலிருந்த கிணற்றைப் பார்த்தான். அதில் தன்னுடைய சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு கீழேயிருந்த பெரியக் கல்லை எடுத்து போட்டான். பின்பு அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். இருட்டில் அவனைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் கிணற்றில் சத்தம் கேட்கவே அதனுள்ளே விளக்கைக் காட்டி பார்க்க ஆரம்பித்தனர்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய சிறுவன் அங்கிருந்து மெதுவாக நழுவினான். ஒரு மணி நேரம் கழித்து வேர்க்க விறுவிறுக்கத் தன்னுடைய வீட்டை அடைந்தவன், அந்த சோர்விலும் "அப்பா" என்று ஆத்திரம் பொங்க அடித்தொண்டையிலிருந்து கத்தினான். "எதற்காக என்னை துணியறையில் வைத்து பூட்டீனீர்கள்? எங்கே அகப்பட்டு விடுவோனோ என்ற பயம் பட்டும் என்னிடத்தில் இல்லாவிட்டால், என்னால் அங்கிருந்து தப்பியிருக்கவே முடியாது, என்னுடைய முழுசக்தியையும், கற்பனையையும் உபயோகிதித்ததால்
மட்டுமே என்னால் அந்த அறையிலிருந்து வெளியே வர முடிந்தது" என்றான்.
அனுபவம் வாயந்த அவனுடையத் தந்தையோ புன்னகையுடன், "மகனே, திருட்டுக் கலையின் முதல் பாடத்தினை இன்று நீ கற்றுக் கொண்டு விட்டாய்" என்றார்.
***************************
6.ஒருமுறை புத்த சந்நியாசி ஒருவர் பேங்கீய் துறவியைப் பார்க்க வந்தார். அந்த புத்த சந்நியாசிக்கு தான் தினமும் புத்தரின் நாமாவை நாள்தோறும் ஓதுவதாக கர்வம் வந்தது. ஜென்னைப் பார்த்ததும் சந்நியாசி "ஐயா! புத்தர் ஒருமுறை ஒரு கையில் தூரிகையை வைத்துக் கொண்டு ஆற்றின் மறுகரையிலிருக்கும் ஒரு காகிதத்தில் ஒரு பெயரை எழுதினாரே அது போல் உங்களால் ஏதேனும் அற்புதம் நிகழ்த்த இயலுமா?" என்றார். அதற்கு ஜென் துறவி கூறினார், "எனக்குத் தெரிந்த அற்புதமெல்லாம் பசிக்கும் போது புசிப்பதும், தாகமெடுக்கும் போது நீர் அருந்துவதும் தான்!".

நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய்

டான்சன், எகிடோ இருவரும் புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.

ஒரு வளைவில் திரும்பும் போது, நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில் அழகான இளம்பெண் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டு அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.

"இங்கே வா!" என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தன்னுடைய கையில் அலக்காக தூக்கிக் கொண்டு சகதியான தெருவின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்.

அன்று இரவு மடத்திற்கு திரும்பும் வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொருக்க முடியாமல், "நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வது கூட தவறு. முக்கியமாக இளமையும், அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவேக் கூடாது. நீ ஏன் அவளைத் தூக்கி கொண்டு சென்றாய்?" என்றான்.

"நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டேன்" என்ற டான்சன், "நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய்?" என்று திருப்பிக் கேட்டார்.

என் சைக்கிளை ஒட்டுகிறேன்

ஆஸ்ரமத்தின் ஐந்து சீடர்கள் சைக்கிளில் சந்தைக்கு சென்றுவிட்டு திரும்புவதை தலைமை குரு பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்ததும் ஐவரையும் அழைத்தார் .


ஐவரையும் நோக்கி '' நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? '' என்று வினவினார்.

'' அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது ஐயா '' முதலாமவன் பதிலளித்தான்.

அவனைத்தட்டிகொடுத்து ''நீ பெரிய அறிவாளி , நீ வயதானகாலத்தில் என்னைப்போல் கூன் விழாமல் நிமிர்ந்து நடப்பாய் '' என்றார் குரு.

இரண்டாவது சீடனோ '' நான் சைக்கிள் ஓட்டும்போது என்னால் இயற்கை அழகை எளிதாகவும் விரைவாகவும் ரசிக்க முடிகிறது ஐயா ''

அவனை அருகில் அழைத்து '' உன் கண்கள் திறந்திருக்கின்றன நீ உலகை ரசிக்கிறாய் '' என்றார்.

மூன்றாவது சீடன் '' ஐயா நான் பயணிக்கையிலும் கூட மந்திரங்களை ஜெபிக்க முடிகிறது ''


குரு தன் கண்கள் விரிய '' அடேயப்பா உன் புத்திக்கூர்மை வியக்கவைக்கிறது'' என்று இரண்டு கைகளையும் சத்தமாக தட்டினார்.

நான்காவது சீடன் '' நான் சைக்கிளில் பயணிப்பதால் ஏகாந்த நிலையை அடைகிறேன் ஐயா '' என்றான்

குரு மனநிறைவோடு அவனை கட்டித்தழுவி '' நீ ஞானத்தை அடையும் பாதையில் பயணிக்கிறாயடா '' என்றார்.



ஐந்தாவது சீடன் நீண்ட அமைதிக்குப் பின் '' என் சைக்கிளை ஒட்டுவதற்காக என் சைக்கிளை ஒட்டுகிறேன் ஐயா! '' என்றான் .

குரு அவன் காலில் விழுந்து '' ஐயா, என்னை மன்னியுங்கள் , நீங்கள் என் சீடனாக இருக்க முடியாது , நான்தான் உங்கள் சீடன் '' என்றார்.

மௌன விரதம்

ஒரு ஜென் குடிலில் தற்போது சேர்ந்த 4 சீடர்கள் இருந்தனர். நால்வரும் இணைந்து ஒரு வாரத்துக்கு மௌன விரதம் இருப்பது என முடிவு செய்தனர். நல்லநாள் பார்த்து விரதத்தை ஆரம்பித்தனர்.

மாலையாயிற்று. விளக்கில் எண்ணை தீரும் போல் இருந்தது. விளக்கு அணையும் நேரத்தில் முதல் சீடர் வாய் திறந்து, "இந்த விளக்கை யாரும் சரி செய்யக் கூடாதா?" என்று தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.

இரண்டாமவர், "நாம் யாரும் பேசக் கூடாது என்பதை மறந்து விட்டாயா?" என்று கடிந்து கொண்டார்.

மூன்றாமவர், "நீங்கள் இருவரும் முட்டாள்கள். விரதத்தைப் பாழடித்துவிட்டீர்களே" என்று தனது விரதத்தை முடித்தார்.

நான்காமவர் முத்தாய்ப்பாக, "நான் தான் கடைசி வரை பேசவில்லை பார்த்தீர்களா!" என்று தனது கடுமையான விரதத்தினை முடித்துக் கொண்டார்!

தவளைக்கறி

சைனாவின் கிராமத்தில் இருந்த ஒரு விவசாயி, பக்கத்திலிருந்த நகரத்திலிருந்த ஒரு சிற்றுண்டி உணவகத்திற்கு சென்று அந்த உணவகத்தின் உரிமையாளரை சந்தித்தான். அந்த ஒட்டல் உரிமையாளரிடம் "இலட்சம் தவக்களையின் கால்கள் வேண்டுமா?" என்றுக் கேட்டான். உரிமையாளர் அந்த விவசாயியைப் பார்த்து வியந்து "இலட்சம் தவளையின் கால்கள் உனக்கு எப்படி கிடைக்கும்?" என்றுக் கேட்டான்.

விவசாயி ஒட்டல் உரிமையாரிடம், "என்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள குட்டை நிறைய தவக்களைகள் உள்ளன. இலட்சக் கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். இரவு முழுவதும் அந்த தவளைகளின் கத்தும் சத்தம் காதைப் பிளக்கிறது. அதணால் அங்கிருந்து பிடித்துக் கொண்டு வந்து தருகிறேன்" என்றான்.

உரிமையாளர் "ஓ! அப்படியா சேதி, அடுத்த வாரத்திலிருந்து தினம் 100 தவளைகள் வீதம் வாரத்திற்கு 700 தவளைகளை பிடித்துக் கொண்டு வந்து தா, அதற்கு தகுந்த பணம் உனக்கு கொடுக்கப் படும். ஒரு மாதம் கழித்து 200 தவளைகள் வீதம் பிடித்துக் கொண்டு வருவதற்கும் இப்பொழுதே ஒப்பந்தம் போடுகிறேன்" என்று கூறி விவசாயியிடம் ஒப்பந்தம் செய்து கொண்டான்.

அடுத்த வாரம் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அசட்டுப் புன்னகையுடன் வந்த விவசாயி ஒட்டல் உரிமையாரிடம் இரண்டு குட்டி தவக்களைகளை காண்பித்தான். சிற்றுண்டி உரிமையாளர் விவசாயியைப் பார்த்து "ஆமாம், எங்கே மற்ற தவளைகள், இரண்டே இரண்டை மட்டும் என்னிடம் காட்டுகிறாய்" என்றார். விவசாயி அசட்டு புன்னகையுடன் "ஒரு பெரிய தவறு நிகழ்ந்து விட்டது. அந்தக் குட்டையில் இந்த இரண்டு தவளைகள் மட்டுமே இருந்தன. ஆனால் இவை போட்ட சத்தம் ஊருக்கே கேட்கும் அளவிற்கு இருந்தது" என்றான்.
(சில சமயங்களில் நம்மை சுற்றியுள்ளவர்களின் புண்படுத்தும் படியான பேச்சுக்கள், ஏச்சுக்கள், துன்பம் கொடுக்கும் செயல்கள் அளவில சிறியதாக இருந்தாலும், நமது எண்ணங்கள் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று எப்பொழுதும் மற்றவர்களின் விமர்சன பார்வையில் நமது தோற்றம், நடவடிக்கை சரியாக இருக்கிறதா என்று எண்ணி அதனை சரிபடுத்தவதற்கோ (அ) அதனைப் பற்றி நினைத்து மனம் வருந்தியோ நமது பொன்னான நேரத்தினை சில நேரங்களில் தூக்கமின்றி செலவழிக்கிறோம். அதனை தவிர்த்து நன்றாக தூங்கி எழுந்து மற்றவர்களின் விமர்சனங்கள் நம்மை எந்த அளவில் பாதிக்கிறது. அவை உண்மையிலேயே நம் மீதுள்ள குறைபாடா (அ) நம்மை பற்றி கேளி செய்வதற்காக சொல்லப் பட்டதா என்று உற்று நோக்கினால், பல விஷயங்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

இந்தக் கதையில் விவசாயி இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவிக்கிறான். அந்தக் குட்டையை போய் எட்டிக் கூட பார்க்காமல் இலட்சத்திற்கு மேல் தவளைகள் இருக்கும் என்று எண்ணுகிறான். ஆனால் உண்மையில் அந்தக் குட்டையில் இருந்ததோ இரண்டு தவளைகள் தான் என்று கண்டு பிடித்த போது அசட்டுத் தனமான தன்னுடைய முந்தைய எண்ணத்தை நினைத்து வருத்தப் படுகிறான். துன்பமும் அதைப் போல தான் எட்டி நின்று பார்க்கும் போது பெரிய பூதகரமான விஷயமாக தோன்றும், அதனுடைய மூலக் காரணம் என்ன? அதனை எப்படி அனுகி தீர்வு காண்பது என்று அமைதியாக சிந்தித்து தீர்வு காண முயன்றால், இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்).

ஆமைகளின் சுற்றுலா

ஒரு ஆமைக் குடும்பமானது சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. குடும்பத்தில் இருந்த எல்லா ஆமைகளும் சுற்றுலாவுக்கு வருவதற்கு சம்மதிக்க ஏழு வருடங்கள் பிடித்தன. இயல்பிலேயே மிகவும் மந்தமாக சுறுசுறுப்பின்றி செயல்பட்டதால், எல்லா குடும்ப உறுப்பினர்களுக்கும் பிடித்தமான சுற்றுலா இடத்தினைக் கண்டு பிடிக்க அடுத்த இரண்டு வருடங்கள் ஆனது. சுற்றுலாவுக்காக கண்டு பிடித்த இடத்தினை சுத்த படுத்த அடுத்த ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டன. அடுத்த இரண்டு மாதங்களில் தாங்கள் கொண்டு வந்த கூடையிலிருந்து எல்லா சாமன்களையும் எடுத்து வைத்து, சிற்றுலாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தன.

எல்லாவற்றையும் முடித்த போது, தாங்கள் வரும் போது உப்பினை கொண்டு வராததைக் கண்டு பிடித்தன. உப்பு இல்லாத பிக்னிக், நிறைவானதாக இருக்காது என்று எண்ணி அவர்களில் ஒருவரை அனுப்பி உப்பு கொண்டு வருவது என தீர்மானித்தன. இருந்த ஆமைகளிலிலேயே மிகவும் வேகமாக செல்லக் கூடிய ஒரு குட்டி ஆமையை உப்பு கொண்டு வருவதற்க்காக தேர்ந்தெடுத்தன. ஆனால் சின்ன ஆமையோ போவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் பட்டுக் கொண்டு அழுதது. தன்னுடைய தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு செல்ல மாட்டேன் என்று அங்கிருந்து நகராமல் அடம் பிடித்தது.

கடைசியாக மற்ற எல்லா ஆமைகளின் வற்புறுத்தலுக்காக அங்கிருந்து செல்வதற்கு ஒப்புக் கொண்டது. ஆனால் தான் திரும்பி வரும் வரை யாரும் சாப்பிடக் கூடாது அப்பொழுதுதான் தான் செல்வேன் என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகன்றது. குடும்ப உறுப்பினர்களும் தங்களுடைய உறுதி மொழியின் படி சாப்பிடாமல் அங்கேயே சின்ன ஆமைக்காக காத்திருக்க ஆரம்பித்தன. ஐந்து வருடங்கள்.. ஆறு வருடங்கள்.. கடைசியாக ஏழு வருடமும் முடிந்தது. ஆனால் அந்தக் குட்டி ஆமை திரும்பி வரவே இல்லை.

பசி பொறுக்காத ஒரு பெரிய ஆமை கடைசியாக கொண்டு வந்திருந்த பொட்டலத்தினை பிரிக்க ஆரம்பித்தது. பின்பு மற்ற ஆமைகளையும் சாப்பிடுவதற்காக சத்தமாக அழைத்தது. அந்த சமயத்தில் பக்கத்திலிருந்த மரத்தின் பின்புறத்திலிருந்து தலையை தூக்கி வெளியே வந்த குட்டி ஆமை "ஆ, எனக்குத் தெரியும், நான் வரும்வரை உங்களால் காத்திருக்க முடியாது என்று, அதணால் நான் உப்பு எடுப்பதற்காக போக மாட்டேன்" என்று சத்தமாக கத்திக் கொண்டே கூறியது.

முஷ்டியை உயர்த்து

டாம்பாவில் இருந்த ஒரு கோயிலில் மொகுஸென் ஹிகி தலைமைக் குருவாக இருந்தார். அவருடைய கோயிலிற்கு வரும் தொண்டர்களில் ஒருவன் தன்னுடைய மனைவியின் கஞ்சத் தனத்தைப் பற்றி அவரிடம் கூறி மிகவும் கவலைப் பட்டுக் கொண்டான்.

மொகுஸென் அடியவரின் வீட்டிற்கு வருகை தந்தார். அவனுடைய மனைவியைப் பார்த்ததும், தன்னுடைய முஷ்டியை உயர்த்தி அவளுடைய முகத்திற்கு நேராக காட்டினார்.

அதைப் பார்த்து வியந்த அவள், "என்ன சொல்ல வருகிறிர்கள்?, எனக்கு ஒன்றும் புரிய வில்லை" என்றாள்.

"ஒரு உதாரணத்திற்காக எனது விரல்கள் அனைத்தும் எப்பொழுதும் இப்படியே மூடி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி இருக்கும் விரல்களை நீ என்னவென்று கூறுவாய்?" என்று கேட்டார்.

"ஒழுங்கற்ற ஊனமான விரல்கள் என்றுக் கூறுவேன்" என்றாள் அந்தப் பெண்.

தன்னுடைய கையை நன்றாக பரந்து தட்டையாக விரித்தவர், அவளுடைய முகத்தைப் பார்த்து, "எப்பொழுதும் இந்த விரல்கள் இப்படியே இருந்தால் என்ன நினைப்பாய்" என்றார்.

அந்த அடியவரின் மனைவி "இதுவும் ஒருவகையான ஊனமே" என்று பதில் கூறினாள்.

"இந்த அளவிற்கு நீ புரிந்து கொள்ள முடிந்தது என்றால்" என்று சொல்லி நிறுத்தி அவளுடைய கண்களைப் பார்த்து "நீ நல்ல மனைவிதான்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

அதன் பிறகு அந்த அடியவரின் மனைவி கனவனுடன் சேர்ந்து சேமிக்கவும் அதே சமயத்தில் தேவையானவற்றிற்கு முறையாக அளவிற்கு செலவு செய்யவும் ஆரம்பித்தாள்.

இறந்தவனின் பதில்

பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராக விளங்கிய மாமியா, ஒரு சமயம் ஸென் ஆசிரியர் ஒருவரிடம் பயிற்ச்சிக்காக சென்றிருந்தான். "ஒரு கையின் ஓசை என்ன?" என்ற புகழ் பெற்ற புதிர்க் கேள்வி (கோஆன்) அவனிடம் கேட்கப் பட்டது.

மாமியா மனதினை ஒரு முகப் படுத்தி கேள்வியின் பதிலினைக் கண்டு பிடிக்க முயன்றான். ஆனால் நாட்கள் ஒடிக் கொண்டிருந்தது. ஆசிரியர் அவனைப் பார்த்து "நீ இன்னும் ஒழுங்காக மனதினை ஒரு முகப் படுத்த வில்லை, உனக்கு இந்த உலக இன்பங்களிலும், பணம், புகழ், உணவு மற்றும் சத்தங்களின் மீது இன்னும் பற்றுதல் இருக்கிறது. ஏன் நீ இறந்து விடக் கூடாது? அது உனக்கு எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும், என் கேள்விக்கான பதிலும் விரைவில் கிடைக்கும்" என்றார்.

அடுத்த தடவை சந்தித்த ஆசிரியர் மாமியாவிடம் "ஒரு கையின் ஓசை என்ன?" என்று மறு படியும் கேட்டார். உடனே மாமியா இறந்தவனைப் போல் சலனமில்லாமல் தரையில் படுத்துக் கொண்டான்.

அதைக் கவனித்த ஆசிரியர் "ஒ! நீ இறந்து விட்டாய?" என்று கூறியவர் மேலும் தொடர்ந்து "ஆமாம், அந்த ஓசையைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று வினவினார்.

ஆசிரியரை கிழே படுத்துக் கொண்டே பார்த்தவன், "அதற்கான பதிலை நான் இன்னும் கண்டு பிடிக்க வில்லை" என்று பதில் கூறினான்.

"செத்த மனிதன் பேசமாட்டான்" எனக் கடுமையுடன் கூறியவர், 'கெட் அவுட்' என்று கத்தினார்.(எனது கருத்து: "ஒரு கையின் ஓசை என்ன?" என்ற புதிர்க் கேள்வி புதிதாக சேரும் மாணவனிடம் அவனுடைய மனதினை ஒரு முகப் படுத்துவதற்காக கேட்கப் பட்டது. ஆசிரியர் "நீ இறந்து போக வேண்டியது தானே?" என்று கடிந்து கொள்வதாக தோன்றினாலும் உண்மையில் அவர் மாணவனை சாகச் சொல்லவில்லை. செத்தவர்களுக்கு மனம் உண்டா? பிணம் யோசிக்குமா?. பிணத்திற்கு குளிரும் வெப்பமும் ஒன்றுதானே?. அது போல சிந்தனைகளை ஒரு முகப் படுத்து. எப்பொழுது உன்னால் ஒருமுகப் படுத்த முடியும்?, எதனையும் இரண்டு நிலையுடன் பார்க்காமல் ஒரு நிலைப் படுத்தினால மட்டுமே, எண்ணங்களை அலசி சீர் தூர்க்கிப் பார்த்துக் கொண்டே இருந்தால் தியான நிலையை அடைய முடியாது. அதனை இலைமறைக் காயாக ஆசிரியர் வெளிப் படுத்துகிறார்.

மாணவன் ஆசிரியரின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்கிறான். ஆசிரியர் கேள்வி கேட்டவுடன் சலனமற்ற நிலையை நடித்துக் காட்டுகிறான். ஆனால் மனதின் உள்ளே இன்னும் சலனம் தீர்ந்த பாடில்லை. ஆசிரியர் அவன் உண்மையிலேயே மனதினை அறிந்து கொண்டான என்பதற்காக "அந்த ஓசையைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்கிறார். ஒசையை அறியாத நிலையை அடையாத அவனால் பிணமாக நடித்த போதிலும், ஓசையினைப் பிரித்துணர்ந்து அதற்கு அர்த்தம் கண்டு பதிலும் தெரியாது எனக் கூறுகிறான்.

உண்மையான பதிலை அறியாமல் சலனமற்ற பிணமாக நடிப்பதை விரும்பாத ஆசிரியர் "கெட் அவுட்" எனக் கத்துகிறார்.)

தண்ணீரின் மேல் நடப்பது

மூன்று துறவிகள் சேர்ந்து தியானம் புரிவது என முடிவெடுத்தனர். ஏரியின் ஒரு கரையில் உட்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒருவன் தீடிரென எழுந்து "என்னுடைய பாயை எடுத்து வர மறந்து விட்டேன்" என்று சொல்லி விட்டு எழுந்து சர்வ சாதரணமாக ஏரியின் மீதுள்ள தண்ணீரில் நடந்து மறுகரையில் இருந்த தன்னுடைய குடிசைக்கு சென்றான்.

அவன் திரும்பிய போது, இரண்டாவது துறவி எழுந்து நின்று, "நான் என்னுடைய உள்ளங்கியை உலர்த்த மறந்து விட்டேன்" என்று கூறியவன் ஏரியின் ஒரு பக்கத்திலிருந்து மறுகரைக்கு தண்ணீரின் மீது நடந்து சென்று துணிமணிகளை உலர்த்தப் போட்டு விட்டு எந்தக் கடினமும் இல்லாமல் திரும்பி வந்தான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மூன்றாவது துறவி தன்னுடைய தியானம் மற்றும் தவ வலிமையும் சோதித்து பார்த்து விடுவது என முடிவெடுத்தான். "உங்களுடைய பயிற்சி என்ன என்னை விட சிறந்ததா? நானும் உங்களுக்கு சளைத்தவன் அல்ல, நீங்கள் செய்வது போல் என்னாலும் செய்ய இயலும்" என்று சத்தமாக அவர்களைப் பார்த்துக் கூறியவன் வேகமாக ஏரியிலிருந்த தண்ணீரை நோக்கி ஒடினான். அவனும் மற்ற துறவிகளைப் போல் தண்ணீரில் நடக்க முயற்சித்தான். ஆனால் "தொபிர்" என்ற சத்தத்துடன் ஏரிக்குள் இருந்த தண்ணீருக்குள் விழுந்தான்.

முயற்சியில் சிறிதும் தளராமல் தண்ணீரில் இருந்து எழுந்தவன், மறுபடியும் தண்ணீரில் நடப்பதற்கு முயற்சித்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தண்ணீருக்குள் விழுந்து முழுகினான். இது போல் கொஞ்ச நேரம் நடந்து கொண்டிருந்ததை மற்ற இரண்டு துறவிகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து, இரண்டாவது துறவி முதல் துறவியைப் பார்த்து, "நீ என்ன நினைக்கிறாய்? தண்ணீரில் எங்கு பாறைகள் இருக்கிறது என்பதனை சொல்லலாமா? வேண்டாமா?" என்று புன்முறுவலுடன் கேட்டான்.(இந்த கதை கருத்து என்னவென்றால் அடுத்தவர்கள் செய்கிறார்கள் என்று நாமும் அதை செய்ய கூடாது, அது சரியா தவரா என்று தெரிந்த பின்னர் செய்ய வேண்டும். இல்லை என்றால் அடுத்தவர்களின் பார்வையில் முட்டாள்கலாக தெறுயும்.)

எதுவும் புதிதில்லை.

முதன் முறையாக தன்னிடம் வந்த மாணவன் ஷிய்டோவினை சோதித்துப் பார்க்க விரும்பினார் சா'ன் ஆசிரியர் சிங் யூவான். "நீ ஆசிரியர் ஹூய் நெங்கின் சீடனல்லவா? ஆசிரியரிடம் கல்வி கற்பதற்கு முன்பு உன்னிடம் இல்லாத ஒன்றை புதிதாத ஆசிரியர் ஹூய் நெங் சொல்லிக் கொடுத்தாரா?" என்று ஷிய்டோவினைப் பார்த்துக் கேட்டார் சிங் யூவான்.

"ஆசிரியரிடம் நான் கற்றுக் கொள்ளுவதற்கு முன்பும் அதன் பின்பும் என்னிடம் இல்லாத எந்த ஒன்றும் புதிதாக என்னிடம் சேரவில்லை" என்றான் பணிவுடன் மாணவன் ஷிய்டோ.

ஆனால் விடாக்கண்டனான சா'ன் ஆசிரியர் சிங் யூவான், "ஆசிரியருடைய போதனைகளினால் புதிதாக எதுவுமே நீ பெற வில்லை என்றால் எதற்காக இத்தனை வருடங்கள் அவரிடம் பயின்றாய்?" என்று இன்னொரு கேள்வியை அவன் முன் வைத்தார்.

"நான் அவரிடம் படித்ததினாலேயே தான் எனக்கு, 'என்னிடம் கல்வி கற்பதற்கு முன்பும், பின்பும் எதுவும் புதிதாக சேரவில்லை' என்பது தெரிந்தது. அதற்காகத் தான் இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டேன்" என்றான்.

அன்பு

கதை
முன்னொரு நாள்
மிகப் பழமை வாய்ந்ததும் கம்பீரமானதும்
ஆன ஒரு மரம் இருந்தது.

அதன் கிளைகள்
வான்வரை விரிந்து பரவிக் கிடந்தன.

அது பூத்துக் குலுங்கும் தருணத்தில்
எல்லா வண்ணங்களிலும் சிரிதும் பெரிதுமான
எல்லாவித வண்ணத்துப் பூச்சிகளும்
அதைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருக்கும்.

அது மலர்ந்து கனிகளைத்
தாங்கிக் கொண்டிருக்கையில்
தொலைதூர பிரதேசங்களிலிருந்து
பறவைகள் வந்து அதில் பாடும்.

நீண்டு திறந்திருக்கும் கைகளைப் போன்ற
அதன் கிளைகள்
அதன் நிழலில் வந்து இளைப்பாறும்
அனைவரையும் ஆசிர்வதிக்கும்.


அதன் அடியில்
எப்பொழுதும் ஒரு சிறுவன்
வந்து விளையாடிக்கொண்டிருப்பான்.
அந்த மரம் அந்த சிறுவனிடம்
ஒரு நேசத்தை வளர்த்துக்கொண்டது.

பெரியவர் தான் பெரியவர்
என்ற நினைப்பைக் கொண்டிருக்காவிட்டால்
பெரியவர்க்கும் சிறியவர்க்கும் நட்பு சாத்தியமே.

அந்த மரத்திற்கு
அது மிகவும் பெரிது என்பது தெரியாது.
அந்த விதமான அறிவை
மனிதன் மட்டுமே கொண்டிருக்கிறான்.

பெரியது எப்பொழுதும்
தனது ஆணவத்தையே முக்கியமாகக் கருதும்.
ஆனால் அன்பிற்கு
சிறியது பெரியது என்று எதுவும் கிடையாது.

நெருங்கிவரும் எவரையும்
தழுவிக் கொள்வது அன்பு.

இப்படியாக அந்த மரம்
எப்பொழுதும் தன்னருகில்
விளையாடுவதற்காக வரும்
அந்த சிறுவனிடம்
அன்பை வளர்த்துக்கொண்டது.

அதன் கிளைகளோ உயர்ந்திருப்பவை
ஆனால் அது அவைகளை
அவனுக்காக
வளைத்துத் தாழ்த்திக் கொடுத்தது.

அப்போதுதானே
அவன் அதனுடைய பூக்களையும்
பழங்களையும் பறிக்கமுடியும்.

அன்பு எப்போதும்
வளைந்து கொடுக்கத் தயாராயிருக்கும்
ஆணவம் ஒருபோதும்
வளைந்து கொடுக்காது.

நீ ஆணவத்தை நெருங்கினால்
அதன் கிளைகள்
இன்னும் எட்டமுடியாமல்
மேல்நோக்கி நீளும்.
அது நீ அதை நெருங்க முடியாதபடி
விரைத்து நிற்கும்.

அந்த விளையாட்டுச் சிறுகுழந்தை வந்தான்
அந்த மரம் தனது கிளைகளைத் தாழ்த்திக் கொடுத்தது

அந்தச் சிறுகுழந்தை
சில பூக்களைப் பறித்துக்கொண்டதில்
அந்த மரத்துக்குப் பெருமகிழ்ச்சி.
அதன் முழு இருப்பும் சப்த நாடியும்
அன்பின் ஆனந்தத்தில் நிறைந்தது.

எப்பொழுதும்
எதையாவது கொடுக்க முடியும்போது
சந்தோஷப்படுவது அன்பு.

எப்பொழுதும்
எதையாவது பெற முடியும்போது
சந்தோஷப்படுவது ஆணவம்.


சில நேரங்களில் அந்தச் சிறுவன்
அந்த மரத்தின் மடியில் படுத்து உறங்கினான்
சில நேரங்களில் அவன்
அதனுடைய பழங்களைப் பறித்து உண்டான்.
இப்படியாக அவன் வளர்ந்து வந்தான்.

சிலநேரம் அவன்
அந்த மரத்தின் மலர்களால்
கிரீடம் செய்து அணிந்துகொண்டு
காட்டு ராஜாவைப்போல
நடித்துக் கொண்டிருப்பான்.

அன்பில் மலர்கள் நிறைந்திருக்கும்போது
ஒருவன் அரசனாகி விடுவான்.

ஆனால் ஆணவத்தின்
முட்கள் அங்கிருந்தால்
ஒருவன் துன்பமும் ஏழ்மையும்
உள்ளவனாகவே இருப்பான்

அந்தச் சிறுவன்
மலர்கிரீடம் அணிந்து
ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து
அந்த மரம் ஆனந்தத்தால் பூரித்தது.

அது அன்பில் தலையசைத்தது
அது தென்றலில் இசைபாடியது.

அந்தச் சிறுவன் மேலும் வளர்ந்தான்
அவன் அந்த மரத்தின் கிளைகளில்
ஊஞ்சலாடுவதற்காக
மரத்தின் மேல் ஏற ஆரம்பித்தான்.

அந்தச் சிறுவன்
அதனுடைய கிளைகளின் மேல அமர்ந்திருக்கையில்
அந்த மரம் மிக மிக சந்தோஷப்பட்டது.

யாருக்காவது
சுகத்தை அளிக்க முடியும்போது
சந்தோஷப்படுவது அன்பு.

கஷ்டத்தைக் கொடுக்கையில் மட்டுமே
சந்தோஷப்படுவது ஆணவம்.

கால ஓட்டத்தில்
அந்தச் சிறுவனுக்கு
மற்ற பொறுப்புகளின்
சுமை சேர்ந்தது.

குறிக்கோள்கள் வளர்ந்தன.
அவன் தேர்ச்சி பெற வேண்டிய
தேர்வுகள் இருந்தன
அவன் அரட்டை அடிக்க ஊர் சுற்ற
நண்பர்கள் சேர்ந்தனர்.

எனவே அவன்
அடிக்கடி அந்த மரத்திடம் வருவதில்லை.

ஆனால் அந்த மரம்
அவனுடைய வரவை எதிர்நோக்கி
ஆவலோடு காத்திருந்தது.

அது அதனுடைய
ஆன்மாவிலிருந்து அழைப்பு விடுத்தது.

வா....வா.
நான் உனக்காகக் காத்திருக்கிறேன்.

அன்பு
இரவும் பகலும் காத்திருக்கும்.

இப்படியாக
அந்த மரம் காத்திருந்தது.

அந்தச் சிறுவன் வராததால்
மரம் சோகத்தில் ஆழ்ந்தது.

பகிர்ந்துகொள்ள முடியாதபோது
அன்பு சோகத்தில் ஆழ்கிறது.

எதையும் கொடுக்க முடியாதபோது
அன்பு வருத்தப்படுகிறது.

பகிர்ந்து கொள்ள முடிவதற்காக
நன்றி சொல்வது அன்பு.
முழுமையாகத் தன்னைக்
கொடுக்க முடியும்பொழுது
அன்பு
ஆனந்தத்தின் உச்சத்தைத் தொடுகிறது.

அந்தச் சிறுவன் வளர வளர
அந்த மரத்தினிடம் அவன் வருவது
குறைந்துகொண்டே வந்தது.

பெரிதாக வளர்ந்துவிட்ட மனிதனுக்கு
குறிக்கோள்கள் அதிகரித்துவிட்ட மனிதனுக்கு
அன்புகொள்ள நேரம் கிடைப்பது
குறுகிக் கொண்டே வரும்

இப்பொழுது அந்தச் சிறுவன்
உலக விஷயங்களில்
தன் முழு கவனத்தையும் கொண்டுவிட்டான்.

ஒருநாள்
அவன் கடந்துசெல்லும்போது
அந்த மரம் அவனிடம் சொல்லியது.

நான் உனக்காகவே காத்திருக்கிறேன்
ஆனால் நீ வருவதில்லை.
நான் தினமும் உன்னை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அந்தச் சிறுவன் கேட்டான்
உன்னிடம் என்ன இருக்கிறது?

நான் ஏன் உன்னிடம் வர வேண்டும்?
உன்னிடம் ஏதாவது பணம் இருக்கிறதா?
நான் பணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
நான் எனும் ஆணவம்
எப்பொழுதும் காரியத்தில்
குறிகொண்டதாகவே இருக்கும்.
ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் மட்டுமே
ஆணவம் தேடி வரும்.

ஆனால் அன்பு பயன்கருதாதது.
அன்பிற்கு அன்புகொள்வதே
அதன் பயன் பரிசு.

ஆச்சரியப்பட்ட அந்த மரம் கேட்டது
நான் ஏதாவது கொடுத்தால் மட்டும்தான்
நீ வருவாயா?

எதையும் பிடித்து வைத்துக்கொள்வது
அன்பு அல்ல.
ஆணவம் சேர்த்துக்கொண்டே போகும்
ஆனால் அன்பு
எந்த நிபந்தனையும் விதிக்காமல்
அளித்துக்கொண்டே இருக்கும்.

எங்களுக்கு அந்த ஆணவநோய் இல்லை
எனவே நாங்கள் ஆனந்தமாய் இருக்கிறோம்.
என்றது அந்த மரம்.

எங்களிடம் மலர்கள் மலர்கின்றன
பல கனிகள் எங்களிடம் பழுக்கின்றன
நாங்கள் இதமளிக்கும் நிழலைத் தருகிறோம்.

நாங்கள் தென்றலில் ஆடுகிறோம்
பாடுகிறோம்.

வெள்ளையுள்ளம் கொண்ட பறவைகள்
எங்கள் கிளைகளில் தாவித் திரிகின்றன
எங்களிடம் பணம் எதுவும் இல்லாதபோதும்
அவை இனிய கானம் பாடுகின்றன.

பணத்துடன் நாங்கள்
தொடர்பு ஏற்படுத்திக்கொண்டால்
அந்தநாள் முதல் நாங்களும்
கோவிலுக்குப் போக வேண்டியதாகி விடும்

பலமிழந்த மனிதர்களாகிய உங்களைப் போலவே-
எப்படி அமைதியைப் பெறுவது
எப்படி அன்பைப் பெறுவது என்று கற்றுக்கொள்ள.

எனவே பணம் வேண்டாம்
எங்களுக்கு பணத்தின் தேவை எதுவும் இல்லை.

அந்தச் சிறுவன் சொன்னான்
பின் ஏன் நான்
உன்னிடம் வர வேண்டும்?
நான் எங்கு பணம் இருக்கிறதோ
அங்கு போகிறேன்.
எனக்குப் பணம்தான் வேண்டும்.

ஆணவம்
பணத்தைக் கேட்கிறது
ஏனெனில்
அதற்கு அதிகாரம் வேண்டும்.

அந்த மரம் சிறிது யோசித்துவிட்டுக்
கூறியது.

எனது அன்பே
வேறு எங்கும் நீ போக வேண்டாம்
எனது பழங்களைப் பறித்து
அவைகளை விற்பனை செய்.
அந்த வகையில்
உனக்குப் பணம் கிடைக்கும்.


அந்தச் சிறுவன்
உடனே பிரகாசமானான்.

அவன் அந்த மரத்தின் மீதேறி
அதன் எல்லாப் பழங்களையும் பறித்துக்கொண்டான்:
கனியாத பழங்களைக்கூட
உலுக்கி எடுத்துக் கொண்டான்.

அந்த மரம் மகிழ்ச்சியடைந்தது
அதன் சில கொம்புகளும் கிளைகளும்
முறிந்துவிட்ட போதிலும்
அதனுடைய பல இலைகள்
நிலத்தில் உதிர்ந்துவிட்ட போதிலும்.

தான் உடைந்தாலும் கூட
அது அன்பை சந்தோஷப்பட வைக்கிறது
ஆனால் முடிவதையெல்லாம்
எடுத்துக்கொண்ட பின்னும்
ஆணவம் சந்தோஷமடைவதில்லை.

ஆணவம் எப்பொழுதும்
இன்னும் அதிகத்திற்கே ஆசைப்படுகிறது.


அந்தச் சிறுவன்
ஒருமுறைகூடத் திரும்பிப்பார்த்து
அதற்கு நன்றி சொல்லவில்லை
ஆனால் அதையெல்லாம்
அந்த மரம் கவனிக்கவேயில்லை.

அது அதனுடைய
நன்றியுணர்வில் நிரம்பியிருந்தது-
தனது கனிகளைப் பறித்து
விற்றுக்கொள்ளச் சொன்னதை
அந்தச் சிறுவன் ஏற்றுக்கொண்டதிலேயே
அது நன்றியுணர்வு கொண்டது.

அதன்பின் அந்தச் சிறுவன்
நீண்டகாலத்திற்குத் திரும்பி வரவேயில்லை.

இப்போது அவனிடம்
பணம் இருந்தது
ஆகவே பரபரப்பாக இருந்தான்-
இருக்கும் பணத்திலிருந்து
இன்னும் பணம் பண்ணும் வேலை.

அந்த மரத்தை
அவன்
சுத்தமாக மறந்துவிட்டான்.

ஆண்டுகள் பல கழிந்தன.
அந்த மரம்
சோகத்தில் ஆழ்ந்தது.

அது அந்தச் சிறுவனின்
வருகைக்காக ஏங்கியது-
எப்படி மார்பில் பால் நிரம்பிய
நிலையிலுள்ள தாய்
தன் மகனைத் தவறவிட்டுவிட்டு
தவிப்பாளோ அதுபோல.

அவளுடைய முழு ஜீவனும்
தனது மகனுக்காக ஏங்கும்
அவள் பயித்தியம் போல
தனது மகனைத் தேடுவாள்-
எப்படியாவது அவன் வந்து
அவளை லேசாக்கிவிடமாட்டானா என்று.

அந்த மரத்தின்
உள் கதறல் அத்தகையதாயிற்று
அதன் முழு ஜீவனும்
வேதனையில் துடித்தது.

பல வருடங்களுக்குப் பிறகு
தற்போது வளர்ந்த ஓர் ஆளாக
அந்தச் சிறுவன் அந்த மரத்தினிடம் வந்தான்.

அந்த மரம் கூறியது
வா என் சிறுவனே வா
என்னைக் கட்டித்தழுவிக்கொள்.

அந்த மனிதன் சொன்னான்
அந்தப் பாசத்தையெல்லாம் நிறுத்திக்கொள்.
அவையெல்லாம் குழந்தைப் பருவ சங்கதிகள்.
நான் இன்னும் குழந்தையல்ல.

ஆணவத்தின் பார்வைக்கு
அன்பு பயித்தியக்காரத்தனம்
குழந்தைத்தனமான கற்பனை.

ஆனால்
அந்த மரம் அவனை அழைத்தது:

வா வந்து என் கிளைகளில் ஊஞ்சலாடு.
வா... ஆடு.
வா... என்னோடு விளையாட வா.

அந்த மனிதன் கூறினான்
இந்தப் பயனற்ற பேச்சையெல்லாம்
முதலில் நிறுத்து!
நான்
ஒரு வீடு கட்ட வேண்டும்.
நீ எனக்கு
ஒரு வீட்டைத் தர முடியுமா?

அந்த மரம் வியப்படைந்தது:
ஒரு வீடா!
நான் வீடில்லாமல் தானே இருக்கிறேன்.

மனிதன் மட்டும்தான் வீடுகளில் வாழ்கிறான்.
மனிதனைத் தவிர வேறு எவரும்
வீடுகளில் வாழ்வதில்லை.

அப்படி நான்கு சுவர்களுக்குள்
அடைபட்டுக் கொண்டுவிட்ட
அவனுடைய நிலையை கவனித்தாயா?

அவனது கட்டிடங்கள்
எவ்வளவு பெரியதாகியதோ அந்தஅளவு
மனிதன் சிறிதாகிப் போனான்.

நாங்கள் வீடுகள் கட்டி வாழ்வதில்லை
ஆனாலும் நீ எனது கிளைகளை
தாராளமாய் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்
பின் அவைகளைக் கொண்டு
ஒரு வீடு கட்டிக்கொள். என்றது.

கொஞ்சம் கூடத் தாமதிக்காமல்
அந்த மனிதன்
ஒரு கோடாலியைக் கொண்டு வந்தான்
அந்த மரத்தின் எல்லாக் கிளைகளையும்
வெட்டிக் கொண்டான்.

இப்போது அந்த மரம்
வெறும் ஒற்றை மரத்தண்டாய் ஆகிப்போனது.

ஆனால் அன்பு
இவை போன்றவைகளைப் பற்றி
கவலைப் படுவதில்லை  -
அன்பு கொண்டவருக்காக
அதன் அங்கங்கள் துண்டிக்கப்பட்டாலும்.

அன்பு என்றால் கொடுப்பது:
அன்பு எப்பொழுதும் கொடுக்கத் தயாராயிருக்கிறது.

அந்த மரத்திற்கு நன்றி சொல்லவேண்டும்
என்றுகூட அவன் நினைக்கவில்லை.
அவன் அவனுடைய வீட்டைக் கட்டிக்கொண்டான்.

நாட்கள் வருடங்களாக உருண்டோடியது.
அந்தக் கிளைகளையிழந்த மரத்தண்டு
காத்திருந்தது.... காத்திருந்தது.

அது அவனுக்கு அழைப்புவிட நினைத்தது
ஆனால் அதற்கு பலமூட்டும்
அதன் கிளைகளோ இலைகளோ
இப்போது அதனிடம் இல்லை.

காற்றடித்தது
ஆனால் அந்தக் காற்றிடம்
ஒரு செய்தியைக் கொடுத்தனுப்பக் கூட
அதனால் இப்போது முடியவில்லை.

இருந்தபோதிலும் அதனுடைய ஆன்மாவில்
ஒரே ஒரு பிரார்த்தனையே
ஒலித்துக் கொண்டிருந்தது:

வா வா என் அன்பே வா.
ஆனால் எதுவுமே நிகழவில்லை.
காலம் ஓடியது
அந்த மனிதனுக்கு இப்போது வயதாகிவிட்டது.

ஒருமுறை அதைக் கடந்து போகும்போது
அவன் வந்தான்
வந்து அந்த மரத்தினடியில் நின்றான்.

அந்த மரம் உடனே கேட்டது
உனக்காக நான் செய்யக்கூடியது
இன்னும் ஏதாவது இருக்கிறதா?

நீ மிக மிக நீண்டகாலம்
கழித்து வந்திருக்கிறாய்.

அந்த வயதான மனிதன் சொன்னான்
நீ எனக்கு வேறு என்ன செய்ய முடியும்?

நான் இப்போது
தூர தேசங்களுக்குப் போக வேண்டும் -
அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக
அதற்குப் பயணப்பட
எனக்கு ஒரு படகு வேண்டும்.

உற்சாகத் துள்ளலோடு
அந்த மரம் கூறியது
எனது அன்பே
அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை
எனது மரத்தண்டை வெட்டிக்கொள்
அதிலிருந்து ஒரு படகு செய்துகொள்.

ஆனால்
தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக்கொள் -
நான் உனது வரவிற்காக
எப்பொழுதும் காத்துக் கொண்டிருப்பேன்.

அந்த மனிதன்
ஒரு ரம்பத்தை எடுத்து வந்தான்
மரத்தண்டை வெட்டிச் சாய்த்தான்
அதிலிருந்து ஒரு படகு செய்தான்
கடல்பயணம் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.

இப்போது அந்த மரம்
ஒரு வெறும் அடிக்கட்டை.

அது காத்திருந்தது -
அதன் அன்பானவனின் வருகைக்காக.
அது காத்திருந்தது
மேலும் அது காத்திருந்தது
மேலும் அது காத்திருந்தது.

அந்த மனிதன் ஒருபோதும் திரும்பவில்லை:
ஆணவம்
எங்கே ஏதாவது கிடைக்குமோ
அங்கு மட்டுமே போகும்.

ஆனால் அந்த மரத்திடமோ எதுவுமேயில்லை
கொடுப்பதற்கு
சுத்தமாக எதுவுமில்லை.

அடைவதற்கு எதுவுமில்லாத இடம்நோக்கி
ஆணவம் ஒருபோதும் போகாது

ஆணவம்
என்றுமே பிச்சைக்காரன்தான்
அது எப்போதும்
யாசித்துக்கொண்டேதான் இருக்கும்.
ஆனால் அன்பு ஒரு அறக்கட்டளை.

அன்பு ஒர் அரசன்
ஒரு பேரரசன்!

அன்பை விட உயர்ந்த
ஒரு அரசன் எங்காவதுண்டா?

ஒருநாள் இரவு
அந்த அடிக்கட்டையின் அருகில்
நான் ஓய்வுகொண்டேன்.

அது என்னிடம் குசுகுசுத்தது
என்னுடைய அந்த நண்பன்
இன்னும் திரும்பி வரவில்லையே.

அவன் ஒருவேளை முழுகிப் போயிருப்பானோ
அவன் ஒருவேளை தொலைந்து போயிருப்பானோ
என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.

அந்தத் தொலைதூர தேசங்கள்
ஏதாவதொன்றில்
அவன் காணாமல் போயிருக்கலாமல்லவா.

அவன் இப்போது
உயிரோடுகூட இல்லையோ என்னவோ.

அவனைப் பற்றிய ஏதாவது செய்திக்காக
எவ்வளவு நான் ஏங்குகிறேன் தெரியுமா?

எனது வாழ்வின்
கடைசிகாலத்தை நெருங்கிவிட்ட
இந்த சமயத்தில்
அவனைப் பற்றித் தகவல் ஏதாவது கிடைத்தால்கூட
நான் திருப்திப் பட்டுக் கொள்வேன்.

அதன் பிறகு நான்
சந்தோஷமாக இறந்து விடுவேன்.

ஆனால் என்னால் அவனை
அழைக்க முடிந்தாலும்கூட
அவன் வர விரும்ப மாட்டான்.

என்னிடம் கொடுப்பதற்கு
இனி எதுவும் இல்லை
ஆனால் அவனுக்கோ
எடுத்துக்கொள்ளும் மொழி மட்டும்தான் புரியும்.

ஆணவத்திற்கு எடுத்துக்கொள்ளும்
மொழி மட்டுமே புரியும்.
ஆனால் கொடுக்கும் மொழியே அன்பு.

நான்
இதற்கு மேல் சொல்ல
எதுவுமில்லை.

மேலும்
இதற்கு மேல் சொல்ல
எதுவும் பாக்கியும் இல்லை.

வாழ்க்கை
அந்த மரத்தைப்போல
ஆகமுடிந்தால்
தனது கிளைகளை
பரந்து விரிந்து பரவச்செய்தால்
அதனால்
எல்லோரும் அதன் நிழலில்
பாதுகாப்புப் பெற முடிந்தால்

அப்போது
அன்பு என்றால் என்ன
என்பதை நாம் புரிந்துகொள்வோம்.

எந்த
வேதப் புத்தகமும் கிடையாது.

எந்த
வழிகாட்டலும் இல்லை.

எந்த
அகராதியும் கிடையாது
அன்புக்கு.

எந்த
குறிப்பிட்ட கொள்கைகளும் கிடையாது
அன்புக்கு.

அன்பைப் பற்றி
நான் எப்படிப் பேச முடியும்
என்று
நான் ஆச்சரியமே படுகிறேன்!

விளக்குவதற்கு அவ்வளவு கஷ்டமானது
அன்பு.

ஆனால்
அன்பு
இதோ இருக்கிறது!